தமிழ் நாட்டில் இன்று பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் பேசிய அவர், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆகியோர் முன்னேற்றத்திற்கு பணி செய்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பசியை போக்க பெற்றோர்களுக்கு உரிய பாசத்தோடு நான் கொண்டு வந்த திட்டம் தான் காலை உணவுத்திட்டம்.
பள்ளிக் குழந்தைகள் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது. அரசுகு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. மாணவர்கள் படிப்பிற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது. இடை நிற்றலை தவிர்க்க வேண்டும். படிப்பதற்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பது அரசின் கடமை,. காலை உணவுத்திட்டம் என்பது முதலீடு. பசி பிணி போக்கும் இத்திட்டம் கனடாவிலும் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
காலை உணவுத் திட்டம் 20.73 லட்சம் குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர். விரிவுபடுத்தப்பட்ட திட்டம் மூலம் 2,2,3,537 குழந்தைகள் பயன்பெறுவர். இத்திட்டம் மூலம் உணவு தரமாக வழங்கப்படும். துளி கூட தரம் குறையாமல் வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறினார்.

