தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பெயர் பதிவேற்றம் செய்த அடுத்த நாளே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்விவிழா நடத்தப்பட்டது. இதில், அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். விரைவில் த.வெ.க. மா நில மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மா நாடு,10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், முதல் மா நாட்டை திருச்சியில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே முதல் மா நாட்டை வரும் செப்டம்பர் அல்லது நவம்பரில் நடத்தலாம் எனவும், மக்களவை சந்திக்கும் வகையில் 100 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பெயர் பதிவேற்றம் செய்த அடுத்த நாளே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

