மும்பையைச் சேர்ந்த தனது மனைவிக்குப் பயந்து பாஸ்போர்டில் சில பக்கங்களை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் துஷார் பவார் என்பவர் சமீபத்தில் தாய்லாந்து சென்றுள்ளார். ஆனால் இந்த பயணம் தனது மனைவிக்கு தெரியக் கூடாது என்பதற்காகவும் இது தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதற்காகவும், பாஸ்போர்டில் உள்ள 12 பக்கங்களை கிழித்துள்ளார்.
அதற்குப்பதிலாக காலி பக்கங்களை ஒட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 11 ஆம் தேதி மீண்டும் தாய்லாந்த் செல்ல விமான நிலையம் சென்றபோது இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இவரை போலீஸில் ஒப்படைத்தனர்.
தொழிலதிபர் துஷார் பவார் இதுவரை 3 முறை நண்பர்களுடன் தாய்லாந்து சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

