நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நீட் தேர்வு வினா – விடைகளை மே 5 ஆம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்படியென்றால் மே 5 ஆம் தேதிக்கு முன்பே ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையைத் தயார் செய்திருக்கிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மே 4 ஆம் தேதி இரவு வினாத்தாள் கசிந்துள்ளது.
இதில், 2 சாத்தியக்கூறுகள் உள்ளது. ஒன்று வங்கி லாக்கருக்கு அனுப்பி வைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3-5ஆம் தேதிக்குள் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் சரியாக வினாத்தாள் எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நீட் தேர்வுக்கு மாணவர்களிடம் ரூ. 400 கோடி வசூலித்துவிட்டு, வினாத்தாள்களை ரிக்ஷாவிலா அனுப்புவீர்கள்? வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் முன்பே நீட் வினாத்தாள் கசிந்திருக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
Sinojkiyan

