ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவர் ஆற்காடு பாலுவின் தம்பி பொன்னையன் பாலு, சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், திருவேங்கடம், ராமு உள்ளிட்ட 11 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலையில் முக்கியக குற்றவாளியாக கருதப்பட்ட திருவெங்கடத்தை போலீஸார் என்கவுண்டர் செய்தனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிம்னுக திமுகவின் அருள், பாஜகவின் செல்வராஜ், ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று, திருவல்லிக்கேனி மேற்கு கழக பகுதி துணைச்செயலாளரும்வழக்கறிஞருமான மலர்கொடியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அஞ்சலை கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, அஞ்சலை உளவு பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் அஞ்சலையைத் தேடி வருகின்றனர்.

