அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன் சிறந்து விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அமெரிக்க நாட்டின் வாஷிங்டனில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன் என்னுடைய ஹீரோ, கிளாடியேட்டர் டிரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம் என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும்,78, ஜன நாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்,81, போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் விலக வேண்டும் என சொந்தக் கட்சியினரே குரல் கொடுத்து வரும் நிலையில், சமீபத்தில், டொனால்ட் டிரம்ப் கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அவரது தலைக்கு குறிவைக்கப்பட்ட நிலையில், காதில்குண்டு பாய்ந்து அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன் சிறந்து விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ’’நம் தலைவர் , என் ஹீரோ கிளாடியேட்டர் டிரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம். அவர் ஓர் உண்மையான அமெரிக்கர். கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் என் ஹீரோவை கொல்ல முயற்சி செய்ததன் மூலம் அவர்கள் அமெரிக்காவின் அதிபரை கொலை செய்ய துணிந்தனர். டிரம்ப் ஓ மேனியா ஆட்சி வேண்டும்…அவர் நாட்டை சிறந்த நாடாக மாற்றுவார்’’ என்று பேசினார்.
Sinojkiyan

