கேரளம் மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 5 ஆம் தேதிவரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வரும் 5 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்த்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று வய நாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என அம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது

