நீதிமன்றத்தில் பாஸ் என்று சொல்லக்கூடாது என்று நடிகர் விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் லைகா நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாக அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா,விஷாலை கண்டித்துள்ளார்.
அதில், ‘’இதுவொன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல..இதுபோன்று பாஸ்(pass)என்று இங்கு பதில் கூறக்கூடாது…ஆம் அல்லது இல்லை என்றுமட்டும் பதில் அளிக்க வேண்டும்! மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? இது இன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல. கவனமாக பதிலளியுங்கள்’’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கண்டித்துள்ளார்.

