தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அவருடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தை அடுத்து, மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அபொடேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் குட் பேடக்லி என்ற படத்தில் அப்டேட் இன்று மாலை 5:32 மணிக்கு வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

