தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் 32 ஆண்டுகளை கடந்துள்ளதைக் கொண்டாடும் வகையில், விடாமுயற்சி படக்குழு,ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்த்தில் அஜித்துடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன் , ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் அஜித்தின் ஃபர்ஸ்ட்லுக், அர்ஜூனின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் 32 ஆண்டுகளை கடந்துள்ளது கொண்டாடும் வகையில், விடாமுயற்சி படக்குழு,ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
அஜித், ரத்தக்கறையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில், தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டுவெல்லும் விடாமுயற்சி என்று குறிப்பிட்டுள்ளது.

