பள்ளிக்குச் செல்ல பிடிக்காத காரணத்தால் தான் படிக்கும் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விடுத்த 14 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.
இந்த மிரட்டலை நம்பி 10 நிமிடத்தில் மாணவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம். பின்அது போலிச் செய்தி எனக் கண்டறிந்த போலீஸார் சிறுவனிடம் விசாரித்தனர்.
இதே வெடிகுண்டு மிரட்டலை நம்பச் செய்வதற்காகவும், அதன் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவும் மேலும் 2 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

