இந்தோனேஷியாவில் எப்போது கல்யாணம் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்த முதியவரை ஒரு நபர் கொலை செய்துள்ளார்.
இந்தோனேஷியாவில் 45 வயதான சிரேகர் என்பருக்கு திருமணம் நடக்கவில்லை. இந்த நிலையில், இவரது திருமணம் பற்றி பக்கத்து வீட்டு முதியவர் ஒருவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.
அவரது கேள்வி சிரேகரின் மனம் புண்பட்டதாகத் தெரிகிறது. இப்படி அடிக்கடி சிரேகரிடம் கல்யாணம் எப்போது? என்று பார்க்கும் போதெல்லாம் கேட்டு தொல்லை கொடுத்து வந்த நிலையில், பக்கத்து வீட்டு முதியவரை சிரேகர் கொன்றுள்ளார்.
மேலும், இக்கொலை நடப்பதற்கு முன் கோழி தங்கள் வீட்டில் மேய்ந்ததாக இருதரப்பினரும் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

