மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா(80) காலமானார்.
கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
மேற்கு வங்க மாநிலத்தின் மார்க்சிச்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாரில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தார்.
கொல்கத்தா வில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா முழு நேர அரசியலில் ஈடுபடும் முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார்.
அரசியலில் ஈடுபட்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். அதன்பின், 2000 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் முதல்வரானார்.
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தின் இன்று காலை காலமானார்.
AlSO READ : மதுரையின் பெருமையைப் பறைசாற்றிய முதல்வர் !
80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்தாண்டு உடல் நலப்பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.
இதையடுத்து, நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். மேற்கு வங்க முதல்வராக இருந்த பட்டாச்சார்யா 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறகாரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
SinojKiyan

