திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் சமையலுக்குத் தேவையான பொருட்களைத் திருச்சியில் இருந்து கொண்டு வந்து அறையில் சமைத்துள்ளனர்.
இந்த நிலையில் பார்பிக்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அடுப்பை அணைக்காமல் எழுந்த புகை காரணமாக உயிரிழப்பா? அல்லது சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழப்பா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு டிரிப் சென்றிருந்த இளைஞர்கள் பார்பிக்யூ சிக்கன் சமைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

