உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், கடந்த 14 மாதங்களில் மட்டும் 9 பெண்களை கொலை செய்த பிரெய்லி பகுதியைச் சேர்ந்த குல்தீப்,35, கைது செய்யப்பட்டுள்ளார்.
குல்தீபுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. இவரின் மோசமான நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளர்.
இதனால், பெண்கள் மீது கோபம் கொண்ட குல்தீப், பெண்களைக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளியாக மாறியுள்ளார்.
பெண்களை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அவர்களை துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி, கொலை செய்தேன் என்று போலீஸார் முன்னிலையில் நடித்துக் காட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

