தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் அன்னப்பூரணி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகிறது.
அதன்படி. நிதிலன் சுவாமி நாதன் இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும், இப்படத்திற்கு மகாராணி என்று பெயர் வைத்துள்ளதாகவும் இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

