தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பணிக்கால வயதுவரம்பு உயர்த்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த அரசுதிட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து இணையதளத்தில் தகவல்கள் வெளியாகும் நிலையில், இதுபற்றி தமிழ் நாடு அரசின் உண்மை தகவல் சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.
அதில், அரசு ஊழியர்களின் பணிக்காலம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்றும், இதுகுறித்து ஆலோசனை, முடிவும் தமிழ் நாடு அரசி சார்பில்
மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

