கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் விசிக -வை அவமானப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் உள்ளதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.
இப்புகாரில், ‘கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் விசிக -வை அவமானப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் உள்ளன. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பேசிவரும் நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

