செல்போனில் பேசியபடி ஹீட்டரை பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மகேஷ் பாபு என்பவர் தனது நாயை குளிப்பாட்டிவிட ஹீட்டரில் தண்ணீர் சூடுபடுத்த முயன்றார்.
அந்த நேரம் பார்த்து அவரது செல்போனில் அழைப்பு வரவேஅதைக் கையில் எடுத்துப் பேசிக் கொண்டே இன்னொரு கையில் ஹீட்டரை பயன்படுத்தினார்.
ஹீட்டர் ஆன் செய்த நிலையில் தண்ணீர் சூடாகிக் கொண்டிருந்தததை கவனிக்காமல் அதில் கையை வைத்துவிட்டார். உடனே அவர் ம் மீது மின்சாரம் பாய்ந்து மகேஷ்பாபு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அவரை மீட்ட அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

