தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், பல நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இம்முதலீடுகள் மூலம் 24,700 நபர்களுக்கு புதியதாக வேலைவாய்ப்புகள் உருவாகும தூத்துக்குடியில் உள்ள செம்பா நிறுவனத்திற்கு முதலீட்டாக ரூ.21, 340 கோடி திட்டம் காஞ்சிபுரத்தில் ரூ.2600 கோடி முதலீட்டில் 2800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் உள்ளிட்ட 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், வரும் 17 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வல்லப்படுகையில் ரூ.206 கோடியில் 18,000 தொழிலாளர்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய தங்கும் இட கட்டிடம் திறக்கப்படவுள்ளது; தமிழகம் பசுமை எரிக்சக்தியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று கூறினார். **
தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் !
Next Article தனுஷை சீண்டிய சிவகார்த்திகேயன்?
Related Posts
Add A Comment

