கொடுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகரும் அதன் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பி.எஸ். வினோத் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் டிரெயிலர் இன்று ரிலீஸான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று நடந்த டிரெயிலர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலையில் நடந்தது. இதில், மிஸ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், யாரையும் கண்டுபிடிச்சு நான் தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். நான் தான் ரெடி பண்ணேன்’ என சொல்ல மாட்டேன். என்னை அப்படித்தான்.
வாழ்க்கை கொடுத்தேன் எனச் சொல்லிப் பழக்கிவிட்டார்க. அந்த மாதிரி ஆள் நானில்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்டிஉள்ளது.
இந்த நிலையில், ’எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்த நிலையில், தனுஷை மறைமுகமாக இப்படி பேசியதாக பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்
தனுஷை சீண்டிய சிவகார்த்திகேயன்?
Related Posts
Add A Comment

