கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் கூழாங்கல். இப்படத்தை இயக்கிவர் அறிமுக இயக்குனர் பிஎஸ். வினோத் ராஜ்.
இவரது அடுத்த படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி.
இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகள் வென்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று இப்பட டிரைலர் வெளியானது.
இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன்,
’’இப்படம் வெற்றியடைந்து, நான் முதலீடு செய்ததுபோக எனகு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து, இயக்குனர் வினோத்தின் அடுத்த படத்திற்கு முன்பணமாக கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால், வினோத் போன்ற 2 இயக்குனர்களுக்கு பட அட்வான்ஸ் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

