டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தை சஸ்பெண்ட் செய்து, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
டோக்கியோ2020 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் இந்திய சாம்பியன் பிரமோத் பஹத்.
டோக்கியோ 2020 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற இந்திய சாம்பியன் வீரர் பிரமோத் பஹத் 18 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து, உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பிரமோத் பஹத் ஊக்க தடுப்பு நெறிமுறைகளை மீறியதால் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

