சிர்சாவில் உள்ள தனது ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற தேரா சச்ச செளதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு மீண்டும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 10 முறை பரோல் வழங்கப்பட்டு, 261 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார்.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி இவருக்கு பரோல் வழங்கக் கூடாது என ஹரியானா சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

