
ஒரு பொருளையோ தயாரிப்பையோ விளம்பரப்படுத்துகிறவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
பிரபல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த, மக்களிடம் பிரபலமாக்க, சந்தையில் தங்கள் தயாரிப்பு பொருட்கள் முதன்மை இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி, அதை விளம்பரம் செய்வார்கள்.
இதற்கு சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை ஒப்பந்தம் செய்து தங்கள் பிராண்ட் அம்பாசிட்டர் ஆக்குகின்றனர்.
இந்த நிலையில், பிரபலங்களும் தங்களுக்கு பணம் கிடைக்கிறதே என்ற நோக்கில் அப்பொருட்களை விளம்பரம் செய்கின்றனர். பல கோடி சம்பளம் பெறுகின்றனர். இதற்கான செலவும் நுகர்வோரிடம் இருந்துதான் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு பொருளையோ தயாரிப்பையோ விளம்பரப்படுத்துகிறவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
அதன்படி, திரைப்படம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர்கள், ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு பொறுப்பேற்க முடியாது என்பதை ஏற்கத்தக்கல் அல்ல என்று தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நுகர்வோரிடம் இருந்து விளம்பரத்திற்காக ஊதியம் பெறுபவர்கள் அதிலிருந்து தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
SinojKiyan
